இயற்கை புரிதல்
நிலவு தூங்கும் தருணம் தேடி
காலை எழும் சூரியன்
தூக்கம் துரத்தும் தவளை சத்தம்
நிறுத்த இரவில் முளிக்குதே
மாலைத் தேடும் மஞ்சள் கதிரும்
நிலவுக்காக ஏங்குதே...
மாலைத் தேரும் சம்மங்கி யாரும்
மணக்க ஊர்வலம் அரங்கேருதே
பல்லாங்குழியின் குழியை விட
வானீர்(மழை) அமைத்திடும் குழியதில்
நீந்தி
நெகிழ்ந்து
ஈந்து
உவந்து
தெரிக்கும் நீர்துளியில் நனைந்திட
புல்வெளி தன் மடியினை
காற்றில் விரிக்கிறது
சாலைக் கடக்க
அங்குமிங்கும் வீழும்
நெகிழியாய் அல்லாமல்
நேரே விழும் மழையை ரசிக்க விழாவிற்கு பின்
வீடு திரும்பும் உறவுகளாய்
வந்தடைகிறது
வானவில் ...
- மணிகண்டன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
