புது யுகம் படைத்திடவே வருக, தமிழ் புத்தாண்டே வருக

தமிழ்
புத்தாண்டே வருக,
புது வசந்தம் தருக!
புன்செய் நிலங்கள்யாவும்
புத்துயிர் பெற்றிடவே வருக! தண்ணிர்
பஞ்சம் இல்லா தமிழகத்தை
படைத்திடவே வருக!
புன்னகை பூவாய் மலர்ந்து, இன்பம்
பூத்து குலுங்கிடவே வருக! மது என்னும் இருளால்
புண்பட்டு வாடும் தமிழகத்திற்கு
புதியதோர் விடியல் தருக!
புரையோடி கிடைக்கும் ஊழல் என்னும் கயமையை
புத்தியால் வென்றிடவே வல்லமை தருக!
புகழ் கொண்ட எங்கள் தமிழினத்தை
புடம் போட்ட தங்கமாய் மாற்றிடவே வருக! இப்
பூவுலகம்தனில் முதன்மை மாநிலமான
பூரித்து விளங்கிடவே செய்க! மலரும் தமிழ்
புத்தாண்டு திருநாட்டில் வளமும்,
புன்செய் நிலமதில் செழுமையையும் கண்டு மகிழும் வரம்தனை, உன்
புதல்வர்களுக்கு சீதமாய் அள்ளி தந்து,
புதிய பாரதம் படைக்க துடிக்கும் ஆளுமை மிகு
பொற் கரங்கள் நம் தமிழரின் கரமென்று உணர்த்திடும் ஆற்றல் தருக!
புத்தாண்டே வருக,
புது யுகம் படைத்திடவே, தமிழ்
புத்தாண்டே வருக!

இவண்
சங்கீதாதாமோதரன்

எழுதியவர் : sangeethaadamodharan (13-Apr-19, 1:17 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 24

மேலே