தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா. . .

தேர்தல் திருவிழா - இது
ஜனநாயக பெருவிழா
ஒருவிரல் புரட்சி - நமக்கு
வேண்டும் மறுமலர்ச்சி
ஏழைகளெல்லாம் இறைவனாய் தெரிவார்கள்
கைகூப்பி கும்பிடுவார்கள்
ஓயாமல் வந்து சந்திப்பார்கள்
ஒட்டுப்பிச்சை கேட்பார்கள்
காலத் தொட்டு வணங்குவார்கள்
வாரிவிட பள்ளம் பறிப்பார்கள்
தேடிவந்து ஒட்டு கேட்டுடுவான்
மோடிவித்தை காட்டிடுவான் - கொஞ்சம்
அசந்து போயி நின்னா - நம்மள
அம்மணமாக நிறுத்திடுவான் !
பொய் எல்லாம் மெய்யாவே சூளுரைப்பான்
பேச்சாலே புத்திய சலவை செஞ்சிடுவான்
அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைகாட்டிடுவான்
அப்புறம் பார் யாருன்னு அவன் காட்டிடுவான்
ஆள்காட்டி விரலிலே மையி
நம்ம ஆயுளையே அடிமையாக்கும்
அவன் சொல்லும் பொய்யி
முடியாத திட்டக்களுக்கு
முன்னுரை வைப்பான் - பின்னால
முடிச்சித்தர கேட்டா - நம்ம
மூச்சை நிறுத்துவான் !
சேரியெல்லாம் - இப்ப
சந்தனமா மணக்கும்
செத்தவனுக்கெல்லாம் உசுரு
தானாவந்து பொறக்கும் - இப்போ
சமத்துவம் எவன்மனசுலயும் இருக்கும்
ஆட்சி ஏறி வந்தபின்னே சாதிவெறி தெறிக்கும்
மாற்றங்களை எதிர்பாக்கும் நமக்கு
ஏமாற்றங்கள் மட்டுமே நிலைக்கும்
யோசிப்போம் யாசியோம்
விடியல் வரும் நாள் விரைவிலே -அது
நம் ஒத்த விரலிலே ! விரலிலே !

மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (13-Apr-19, 1:35 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : therthal thiruvizaa
பார்வை : 33

மேலே