கைபேசி

கைப்பேசி

எல்லா தகவலையும்
செல் அறிவித்து விடுவதால்
புத்தகங்களை
செல் அரிக்கின்றது

முகநூலைப்
பார்த்துக்கொண்டே
நாம்
மனிதத்தின்
அகநூலை
மறந்துவிட்டோம்

கைபேசியும்
பாசியும் ஒன்றே
இரண்டும்
வழுக்கியே விடுகிறது
நம்மை

அன்று
காதுகளின்
பசியை மட்டும்
தீர்த்த கைபேசி
இன்று
அனைத்துப்
பசியையும்
தீர்க்கிறது

கைகள்
இன்றிகூட மனிதன்
வாழ்ந்துவிடுவான்
கைபேசி இன்றி
வாழ்வது கடினம்

கைபேசி
நல்லக்காதலை
மீட்டும் தம்புரா
கள்ளக்காதலை
கூட்டும் வெண்புறா

அது
உள்ளங்கை
நெல்லிக்கனி
அது
இருந்தால்
உலகம்
உன் கையில்
என சொல்லிக்க நீ

கால் அடியில்
அனைத்து தகவலையும்
நம் காலடியில்
தரும் அட்சய பாத்திரம்
கைபேசி

எழுதியவர் : புதுவைக் குமார் (13-Apr-19, 1:09 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaipesi
பார்வை : 48

மேலே