நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

துன்பங்கள் சிறை பிடிக்கையில்..,
என் கனவுகள் தூங்கும் வேளை, தட்டி எழுப்பும் இலட்சிய சம்மனசுகள் என் நட்பு வட்டங்கள்..!
என் கவலைகளில் இரவு நேரத்து தூரத்து வான்தாரிகைகளாய் என்னை விந்தைஉலகிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் என் நட்புப் பூக்கள்..!
குழப்பங்கள் என்னை சூழ்கையில்.., நல்லன சுட்டும் சான்றோனாய் என் நட்புச் சுற்றங்கள்..!
எதையும் எதிர்காணா என் பலவருட நட்புகள்..., பள்ளியில் ஒன்றாய் தீட்டிவைத்த நம் சித்திரத்தின் நிறங்கள் குன்றிட.., நாம் மட்டும் மிளிரும் நம் நட்பின் விந்தைகள்..!
என் மலர்க்கொத்துகளில் ஓர் இதழ் மலர்ந்த நாள்...
வாழ்க பல்லாண்டு நட்பே..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

எழுதியவர் : சரண்யா (14-Apr-19, 9:13 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 983

சிறந்த கவிதைகள்

மேலே