நண்பனின் பிரிவு
ஒன்றாக மகிழ்ந்த காலம்
ஒன்றாக வாழ்ந்த காலம்
ஒன்றாக பகிர்ந்த காலம்
ஒன்றாக பலமாக திகழ்ந்த காலம்
ஒன்றாக இணைந்து கடந்த காலம்
ஒன்றாக உணவு கொண்ட காலம்
ஒன்றாக கதைத்த காலம்
ஒன்றாக திரிந்த காலம்
ஒன்றாக வெளியில் நின்ற காலம்
இவை யாவும்
எக்காலமும் நிலைக்கும் என்று நான் கொண்ட கனவை
ஒரு துளி விஷம் போன்ற கோவம் கொண்டு சென்றதேனோ....
உறவாய் நின்று என் உலகமாய் நிலைத்து
நட்பின் உயர்வை உணர்த்தியவனே
மீண்டும் வருவாயா
நான் இழந்த என் பலத்தினை
மீட்டு தருவாயா
என் ஆருயிர் தோழனே.....