மதுக்கிண்ணமடி நீ

எந்தன் அழகிய காதலியே
என்னே உந்தன் புன்னகைத்
ததும்பும் இதழ்களின் அழகு
மதுவேந்தும் கிண்ணமாய் அல்லவா
என்னக்கது காட்சி தருகிறது
அதன் சிவந்த இயற்கையாய் வந்த
சாயம் மதுக்கினத்தில் ஊற்றிய
மதுவாய் தோன்றி என் மனதை
உன் இதழ்கள் பக்கம் இழுக்குதே
விரைந்து வந்து உறவாட என்
மனத்தைக் கவர்ந்த மதுக்கிண்ணமே நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-19, 1:54 pm)
பார்வை : 106

மேலே