காதல்

ஏதேதோ வித விதமாய் உடையணிந்து
தலையிலும் உதட்டிலும் சாயம் பூசி
முகத்திலும் மெருகேற்றி ஒய்யாரமாய்
இருக்கும் நவநாகரீக நங்கை இங்கு
நகரத்தில் காதலுக்கு அலைவதுண்டு
நவீன காதலனைத் தேடி

இதோ இங்கு இவள் க்ராமத்துபைங்கிளி,
இவள் மேனியின் ஒரே பூச்சு முகத்தில்
பூசிய மஞ்சளும் கையில் இட்ட மருதாணியுமே
இவள் அறிந்த ஆடையோ பாவாடையும் தாவணியும்
பின்னிய தலையில் அன்று பூத்த அவள் தோட்டத்து
மல்லிகைப்பூவின் அலங்கரிப்பும் ..............


வீசும் நிலவின் தன்னொளியில்
தான் வாழும் சிறு குடிசையின்
வெளியில் வந்து பரிசம் போட்ட
மாமனுக்காக அவன் காதலுக்கு
ஏங்கிடும் க்ராமத்துப் பெண்ணின்
நெஞ்சிலும் காதல் பொங்கி வழியும்
ஆயின் அது இயற்கையின் நிழலிலே
இயற்கையோடு மட்டுமே உறவாடும்
ஒருபோதும் இயற்கையின் வரம்பைத்
தாண்டாது இயற்கையோடு ஒன்றிடும் உறவு
இந்தக் காதல் காதலா இல்லை அந்த
நகரத்து நவீன பெண்ணின் காதல் காதலா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-19, 1:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 185

மேலே