பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 7 சுலோகம் 16 17
16 .
புலன்விருப்பம் இல்லாதான் தூயோன் திறமையோன்
ஓர்புறம்சா ரான்துயரி லான்கர்மத் தின்தியாகி
யார்அவனே என்பிரி யன் !
17 .
மகிழான் வெறுப்பிலான் ஓர்துன்பம் இல்லாதான்
ஆசை இலாதான்நன் மைதீமை விட்டபக்தன்
யார்அவனே என்பிரி யன் !
-----கீதன் கவின் சாரலன்