தக்கதோர் மருந்து இங்கு ஏது

தக்கதோர் மருந்து இங்கு ஏது ?
**************************************************

இகத்தினில் பரத்தை காண்போம்
இருதயத்து இன்பம் தேக்க
அகத்தினை கோயில் ஆக்கி
அதனுளே அமைதி கூட்டும்
உகப்பினைச் சிவமாய் வைத்தே
ஒன்றியே வாழ்வோம் . துன்பம்
தகப்பதற் கிதனின் வேறு
தக்கதோர் மருந்திங் கேது ?

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Apr-19, 7:06 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 50

மேலே