யார் இவன்
சூரிய வெப்பம் தாங்காத மேகம்
அன்று கதறி அழுதது
அதன் கண்ணீர் துளிகளோ
கழுவி கொண்டிருந்தது பூமியை...
அகம் மகிழ்ந்த அந்த பூமி தாயின்
அங்கத்தை ஒருவன்
சிதைத்து கொண்டிருந்தான்
ஒற்றை துணியால் மானம் மறைத்து...
யார் இந்த விசித்திர மனிதன்
என்மேனியை ஏன் பாழாக்குகிறான்
என்றெண்ணிய அத்தருணம்
நெல்விதை வீசினான் அவள் மீது...
குழம்பி போனாள் பூமி தாய்
தினம் தினம் அவன் பராமரித்தான்
சிதளம் செய்த அம்மேனிக்கு
உரமான மருந்து போட்டான்...
நாட்களும் நகர்ந்தது உடலோ தளர்ந்தது
பயிர்களும் வளர்ந்தது தாயுடலோ குளிர்ந்தது
வியந்து போனாள் பூமித்தாய்
ஓருடையில் தன் மானம் மறைத்தவன்
என்னுடல் மானம் மறைக்க
பச்சை ஆடையை
தன்மேல் அணிவித்தவனை எண்ணி வியந்தது
இவன் விசித்திரமானவன் அல்ல
விந்தையானவனென்று...