மரங்கள்
மரங்கள் !
தோளோடு தோள் நின்ற
தோழனை வேண்டாமென்று
சுட்டு பொசுக்கும் சூரிய
வெயிலை தன்னுடல் ஏந்தி
காலுக்கு கீழே தவிக்கும்
ஜீவன்களுக்கு !
குளுமை அள்ளி கொடுத்தும்
வானத்தில் விரையும் மேகத்தை
கண்ணால் கவர்ந்து காதல் பேசி
பூமியை நனைக்க மழையை
பொழிந்தும் !
பேசா மடந்தை தூணாய்
நின்று மண்ணின் பரப்பை
இறுக்கி பிடித்து
மலைகளின் சரிவை
தடுத்து நிறுத்தியும் !
காடுகளாய் வளர்ந்து
பருவத்தின் நிலைக்ளை
பக்குவப்படுத்தி பூமியை
காத்தும் !
வெட்டி வீழ்த்தி
காசாக்கி கரியாக்கி
மர சட்டமாக்கி
சாலைகள் விரிய,
கட்டிடங்கள் கட்ட
கண்களில் பேராசையாய்
இன்னும் கிடைக்குமா ?
தேடிக்கொண்டிருக்கிறான்
வெயிலால் காய்ந்து கருகியும்
நாக்கு வறண்டு போன பின்னால்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
