வங்காள நவாப்

வங்காள நவாப் சிராஜுதின்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தான்
நாளை நடக்கவிருக்கும் பாலாசி யுத்தம்
அவன் சிந்தனையில்......................
யுத்தத்திற்கு அவன் சேர்த்துவைத்த
பீரங்கி வெடியுப்பு மாமரத்தோப்பின் கீழ்,
அதன்மீது காய்ந்த இலைகள்கொண்ட மூடி,
நாளை இதை வைத்து ஆங்கிலப் படையைத்
துளைத்துவிட நவாபின் எண்ணம்............
பகைவனை வீழ்த்திவிட்டான் நவாப் சதுரங்கத்தில்,
அப்படியே கற்பனையில் தூங்கியும் விட்டான்
கனவில் ஆங்கிலேயர் அவன் காலடியில் ...
மறுநாள் காலை விடிந்தது ..... மழைத்தூறல்
இப்போது நவாபின் மாளிகை அருகில் இருக்கும்
மாந்தோப்பு அவன் கருத்தில்....................
புதைத்துவைத்த பீரங்கி கலவை மழையில் நனைந்து போக
ஆங்கிலேய போர்வீரர்களின் ஆக்ரமிப்பு துவங்கியது
பீரங்கி சரியாக புகையாத நவாபின் சேனை
இயற்கையும் நவபைக் கைவிட்டதேனோ!
ஆடி அடங்கியது , கர்னல் கிளைவ் வெற்றிகொண்டான்
ஆங்கிலேயர் வியாபாரம் இப்போது இந்தியாவை
தன் ஆதிக்கத்தில் வைக்க துவங்கியது .......
எங்கோ ஓரத்தில் இதை ரசித்து எக்காள சிரிப்பு!
சிரித்தவன் நவாபின் மெய்க்காப்பாளன் மீர்ஜாப்பர்!
நாட்டைக் காட்டிக்கொடுத்த 'பச்சை துரோகி'
பாவம் தோல்வியுற்ற நவாப் கைதானான்
கைது செய்த கர்னல் ராபர்ட் கிளைவின் காலடியில் இப்போது
நவாபின் சதுரங்க பலகையும் ..... நவாபின் தலைப்பாகையும்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Apr-19, 10:59 am)
பார்வை : 78

மேலே