விஹாரி

சித்திரைப் பாவையே நீ
இந்த தமிழ் வருடம் விஹாரி
என்ற பெயரில் உதித்தாய்
இந்த வருடம் இதோ
இன் நாடெங்கும் பொதுத் தேர்தல்
நடந்துகொண்டிருக்க , விஹாரி,
நீ உந்தன் பெயர்க்கேற்றவாறு
இந்த தேர்தலுக்குப் பிறகு
புதியதாய் வரும் அல்லது
மீண்டும் ஆட்சிக்குவரும்
பழைய ஆட்சியர் இருந்தாலும்
மக்களுக்கு வாழ்வில் நலம்பெற
வளம்பெற நல்ல மாற்றங்கள் தந்துவிடு
விஹாரியாம் உன் பெயரை
நிலை நிறுத்திக்கொண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Apr-19, 2:26 pm)
பார்வை : 18

மேலே