காணாத மழை

காணாத ,மழை !

முகம் முழுவதும் முத்தமிட்டு
தழுவி செல்லும் துளிகள்
ஸ்.ஸ்.ஓசையுடன் காதோரம்
சப்தமிடும் காற்று !
உடைகளை உடலுடன்
ஒட்டவிட்டு ஆண்களின் பார்வைகளில்
பல அர்த்தங்களை காட்டி
பதட்டமையடைய செய்து
கெக்கலித்து செல்லும் மழை
திவலைகள் !
மூக்கின் அருகில் வந்து
மூச்சிழுக்க வைக்கும் மண்ணின்
மணம் !
ஆஹா கருணை காட்டிவிட்டாய்
இந்த காய்ந்து போன
உடலுடன் சுருங்கி சுண்ணாம்பாய்
வெந்து கொண்டிருக்கும் எங்களுக்கு !

மழையே உன்னை ஆவலுடன்
வரவேற்கிறேன் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Apr-19, 4:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kaanaatha mazhai
பார்வை : 245

மேலே