மருந்தினால் மனம் புகுமோ

அடுத்தவரிடம் பெற முடியுமோ
ஆன்மீகத்தால் அடையலாமோ
திடுமென வந்திடுமோ
தேடித்தான் போகணுமோ

பிறப்பினால் கிடைத்திடுமோ
பிறரோடு பழகினால் கிடைக்குமோ
மருந்தினால் மனம் புகுமோ
விரும்பியதை தின்றால் வருமோ

கற்பதனால் பெருகி கண்டு பல தேடி கற்று
அறிஞர்களோடு பழகி அவர்கள் கருத்தை நாடி
குழம்பி தெளிந்து குதுகலமடையும் போதெல்லாம்
வரும் உச்சபட்ச தெளிவே அறிவாம்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Apr-19, 9:45 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 194

மேலே