உயிரை சிதைத்து இரசிக்கும்

உலகில் பிறவி எடுத்தது எதனால்
பெரிய பெயரும் கொண்டது எதனால்

மதிக்கத் தெரியா மாந்தருடன்
மதி மயங்கி வாழ்வது எதனால்

உயிரை சிதைத்து இரசிக்கும் மாந்தர்
உடன் குற்றங்காணமல் பழகுவது எதனால்

குறுகிய எண்ணம் கொண்டோர் எல்லாம்
கோலோச்சும் பதவி பெற்றது எதனால்

நன்மை செய்வோர் எல்லாம்
பிடிவாதம் கொள்வது எதனால்

வளர்ச்சி அடைந்தோர் எல்லாம் - பிறரை
அலட்சியம் செய்வது எதனால்

அலசி பலதைப் பார்த்தால் - நம்மில்
அழற்சி வந்ததே மிச்சம்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Apr-19, 10:26 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 384

மேலே