ஆதிரையின் ஆத்திரம்

1) பேரங்காடியில் கொள்ளை முயற்சி

இரவு நேரம், சுமார் மணி பத்து இருக்கும், ஒரு பெரிய பேரங்காடியின் கார்கள் நிறுத்தும் இடத்தின் அடிப்பாகம். கணவன் மனைவி இருப்பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம், ஷோப்பிங் செய்து விட்டு சந்தோஷமாக வீடு திரும்ப காரை கைவிசை மூலம் திறந்து உள்ளே சென்று உட்கார முற்பட்டபொழுதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ஒருவன் சட்டென அவர்களை தாக்கி அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க முற்பட்ட சமயம், திடீரென்று சுழல் காற்றைப் போல் ஒரு உருவம் சுழன்று வந்து அவர் மனைவியின் உடலில் புகுந்தது. அக்கொள்ளையன் அவரைத் தாக்கிக்கொண்டு இருந்த சமயம் இருப் பிள்ளைகள் பயத்தால் கதறி அழும் நேரம், அவரின் மனைவி மட்டும் ஆவேசமாக அக்கொள்ளையனின் முகத்தை அறைந்தாள்.

அவளின் கணவனும் அதிர்ச்சியாக தன் மனைவியைப் பார்த்தான். "எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு தைரியம் வந்தது". மனைவியின் செயலைக் கண்டு அதிர்ச்சியாக நின்றிருந்த தருணம், மறைந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு நண்பன், தன் நண்பனை அவள் அறைந்ததை பொருக்க முடியாமல், அவளைத் தாக்க ஆவேசமாக ஓடி வந்தான்.

அடி வாங்கிய அக்கொள்ளையன் சினம் கொண்டு அவளைத் தாக்க கையை ஓங்கிய போது வீரிட்டு பறந்து விழுந்தான். அவளைத் தாக்க ஓடி வந்த நண்பன், அவன் பறந்து விழுந்ததைக் கண்டதும் ஓடி வந்தவன் பயந்து பின் வாங்கி அவ்விடத்தை விட்டு ஓடி விட்டான். பறந்து விழுந்தவனை, அவள் தன் கண்களாளே புரட்டி எடுத்து அவனை மாடிக்கு ஓட வைத்தாள். அவனே தானாக விழும்படி செய்து அவனைக் கொன்றாள். அவன் இறந்தப்பிறகுதான் அவளின் உடம்பில் தஞ்சமிருந்த சுழல் காற்றாய் வந்த உருவம் வெளியே சென்றது. வெளியேறியவுடன் அவள் மயங்கி விழுந்தாள்.

விடிந்தப்பின் போலிஸ்காரர்கள் பரபரப்பாக அங்கும் இங்குமாக அப்பேரங்காடியை சூழ்ந்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கம் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரித்ததில் இறந்தவன் ஒரு போதைப் பித்தன், பணத்துக்காக கொள்ளையடிப்பது தான் இவன் வேலை என்று தெரிய வந்தது. இவனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இவன் இறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தனர்.

போலிஸ்காரர்களின் குற்றச்செயல்களின் பதிவேட்டில் ஏற்கனவே இவன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை காலத்தின் இரண்டாவது மாதத்தில் தப்பியோடியவன் என்று தெரிய வந்தது. ஆனால் அன்று இவனுடன் பிடிபட்டு இவனடனே தப்பியோடிய இவனின் நண்பன் எங்கே, அவனைக் கண்டுபிடித்தால் அன்றிரவு பேரங்காடியில் நிகழ்ந்த அசம்பாவதத்திற்கு காரணம் புரியுமென்று போலிஸ்காகரர்கள் கூட்டு ஆலோசனை செய்தனர்.

2) காரில் பூகம்பம்

ராஜ ராஜேந்திரன் தன் வாகனத்தை டிரைவர் செலுத்த, அவர் பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு முக்கிய வேலையாகச் சென்றுக் கொண்டிருந்தார். வாகனம் ஒரு அரை மணி நேர ஓட்டத்திற்கு சுமூகமாகத்தான் ஓடியது. அதன் பிறகு நிகழப்போகும் அசம்பாவிதம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை சுமூகமாக ஓட்டிக்கொண்டிருந்த ராஜ ராஜேந்திரனின் டிரைவர் திடீரென பித்து பிடித்தவன் போல் ஆனான், அதன் பின் கொலை வெறியெடுத்து அசூர வேகத்தில் வாகனத்தை செலுத்தினான். "டிரைவர் மெதுவாக ஓட்டு" என்று பல முறை கூறியும் டிரைவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டினான். சற்று நேரத்தில் நிலைமையை அறிந்துக்கொண்ட ராஜ ராஜேந்திரன் பின் இருக்கையிலிருந்து டிரைவரின் காலைத் தட்டி விட்டு அவன் ஓட்டும் வேகத்தை குறைக்க முயன்றார். சற்று நேரத்தில் வேகம் குறைந்தவுடன் கதவை திறந்து வெளியே குதித்து வெளியே வந்து விழுந்தார். டிரைவருடன் ராஜ ராஜேந்திரனின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி டிரைவர் உயிரிழந்தான். ராஜ ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவில்லை. இருப்பினும் அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன. இது யாரோ தம்மை பழிவாங்கும் நோக்கில் ஏவல் வேலை செய்துள்ளனர் என நம்பினார். தமக்கு விரித்த வலையில் அப்பாவி டிரைவர் பலியாகிவிட்டான், என பல எண்ணங்கள் அவருக்குள் தோன்றியது. ராஜ ராஜேந்திரன் நேரம் தாழ்தாமல் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவரை நேரில் கண்டு நிகழ்ந்தவற்றை கூறினார். அவர் ஒரு சில பூஜைகள் செய்ததில், ஆதிரை எனும் பெண் ஆன்மா, ராஜ ராஜேந்திரனின் குடும்பத்தை பழிவாங்க துடிப்பது தெரிய வந்தது. ராஜ ராஜேந்திரன் சித்தர் கூறியதை கேட்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சுக்குள்ளாகினார், அவர் சிங்கப்பூரில் இருக்கும் பார்வதிக்கு அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நிகழ்ந்தவற்றை கூறி உடனே இந்தியா வரச்சொன்னார். ராஜ ராஜேந்திரனின் அழைப்புக்கு பதில் கூறிவிட்டு அலைப்பேசியின் விசையை அடைத்த பார்வதியின் நினைவலைகள் பின்னோக்கியது.

3) வருமையிலும் கல்வி

ஆதிரை நிறமோ மாநிறம், வயதோ இருபது, அழகோ அழகு. நீண்ட இடையைத் தொட்டு முத்தமிடும் கூந்தல். விண்மீனைப் போல் ஒளி வீசும் கண்கள். அழகிய கூர்மையான மூக்கு. ரோஜா இதழ்களைப் போல் மென்மையான உதடுகள். கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில் அழகிய மார்பகங்கள் அவள் அழகை மெருகூட்டியது. இளம் வாலிபர்களை திண்டாட வைக்கும் அவள் அழகோ அழகு. அவள் இடையோ மெல்லிய கொடி மலர். தசைகள் நிரம்பிய சற்று தூக்கலான பின் புறம். அப்படியொரு கிராமத்து தேவதை ஆதிரை. சபல ஆண்களுக்கு சுட்டுப் பொசுக்கும் நெருப்பு. தனக்கென ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு அதன் வழி வாழும் ஒரு பெண். பள்ளிப் படிப்பை முடித்த ஆதிரை மேல்படிப்பை படிக்கும் எண்ணத்தை கைவிட்டாள் குடும்ப சூழ்நிலை காரணமாக, அக்காள் பார்வதி அம்மா காமாட்சி என ஆண்கள் இல்லாத வீடு. ஆதிரை மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் பொழுது அவள் அப்பா விபத்தில் இறந்து விட்டார். பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி குடித்து விட்டு நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் குடிகாரன். அப்படி ஒரு நாள் குடித்து விட்டு மல்லாந்து கிடந்த பொழுது கார் ஒன்று எதிர்பாராமல் ஏறியதில் இறந்துவிட்டார். ஆதிரையின் அப்பா தன் அம்மாவை திருமணம் செய்யும் காலத்திலேயே வேலைக்குச் சென்றதில்லை. அம்மா தான் வீடு வீடாக கூலி வேலைச் செய்து குடும்பத்தை பிச்சை எடுக்கும் நிலையின்றி காப்பாற்றியவள். அக்காள் பார்வதி அம்மாவின் சுமைகளை குறைக்க பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கிராம அலுவலகத்தில் எடுபிடி குமாஸ்தாவாக வேலைச் செய்து வந்தாள். இருவரும் சம்பாதிக்கும் சம்பளம் அரைவயிறு கால் வயிறு கூட போதாத நிலைதான். மறுபுறம் ஆதிரை அக்காள் பாரவதிக்கும் ஆதிரைக்கும் நீண்ட வயது வேறுபாடு. பார்வதி பிறந்து பல வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள் ஆதிரை. சிரமம் என்றதொரு வார்த்தை தன் தங்கை ஆதிரையை நெருங்க விடாமல் பொத்தி பொத்தி பார்த்து குடும்ப கஷ்டங்களை ஆதிரையிடம் காட்டிக் கொள்ளாமல் அவள் படிக்கும் வரை அவளுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்தாள் அக்காள் பார்வதி.

என்னதான் அம்மாவும் அக்காவும் தங்களின் குடும்ப கஷ்டங்களை ஆதிரையிடம் காட்டிக்கொள்ளாவிட்டாளும் அவள் புரிந்துக் கொண்டாள். ஆதலால் அவள் மேல்கல்வி தொடர மனமில்லாமல் தானும் ஏதேனும் வேலை செய்ய எண்ணினாள். தன் அக்காளுக்குத் தெரியாமல் தன் பரீட்சை முடிவை மறைத்துவிட்டாள். தன் அக்காளிடம் வேலைக்குச் செல்லும் எண்ணத்தைக் கூறினாள். அப்பா இறந்த பிறகு அக்காள் தான் எல்லா முடிவுகளையும் அவ்வீட்டில் எடுப்பாள். அம்மா காமாட்சியும் பார்வதியின் முடிவுக்கு மறுபேச்சி சொல்லமாட்டாள். ஆதிரை அம்மாவுக்கும் அக்காவுக்கும் மேலும் தாம் பாரமாக இருக்க கூடாது என்பதற்காகவே பள்ளிப் படிப்பு படிக்கும் பொழுதே அக்காவைப் போல் இடையில் நின்றுவிட்டு வேலைக்குச் சென்று குடும்ப பொறுப்பில் பங்குப் பெற எண்ணி அக்காவிடம் கூறிய பொழுது, தான் மேல்படிப்பு படிக்கும் எண்ணம் காணல் நீராகிவிட்டது. நீயாவது பட்டப் படிப்பு படிக்க வேண்டும், அப்பொழுது தான் நானும் அம்மாவும் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்றாள். ஆதிரையும் ஏனோ தானோ தான் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலைக்குச் சென்று விடலாம் என்றிருந்தாள். தான் ஒன்று நினைத்தால் ஆண்டவன் ஒன்று நினைப்பான். ஆம், ஆதிரை சிறந்த தேர்ச்சிப் பெற்றாள். ஒரு சிலர் விழுந்து விழுந்து படிப்பாரகள், பரீட்சையில் கோட்டை விட்டு விடுவார்கள், சிலர் நாட்டமில்லாமல் பொழுது போக்காக படிப்பார்கள் பரீட்சையில் சிறந்து விளங்குவார்கள். ஆதிரை இரண்டாவது ரகம்.

ஆதிரை தன் அக்காவிடம் பரீட்சை ஊத்திக் கொண்டது, மேல் படிப்பு படிக்கும் ராசி எனக்கில்லை என்னையும் ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்து விடேன் என்றாள். அக்காவும் அப்படியே நம்பிவிட்டாள். பிறகு அக்கா, ஒரு நாள் வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக ஆதிரையின் பரீட்சை முடிவு அவளின் கண்களில் தென்பட்டது. அதில் அவள் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருந்தாள். பார்வதி ஆதிரையை அழைத்து கடுமையாக திட்டிவிட்டாள். மேல் கல்வி கற்கச் சொன்னாள். "ஆதிரை எனக்கு தான் மேல்கல்வி கற்க வாய்ப்பில்லை, அச்சமயம் அம்மா ஒருவர் தான் வேலை. இப்மொழுதான் இருவர் வேலை செய்கிறோமே, நீ எங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மேல்கல்வியைப் படி, நானும் அம்மாவும் உனக்குத் துணையாக இருப்போம், என்றாள் அக்காள் பார்வதி.


4) கல்லூரிக் காதல்

ஆதிரை பலக் கல்லூரிகளுக்கு அப்ளிகேஷன் போட்டாள். ஒரு சில நாட்களில் கல்லூரியிலிருந்து நல்ல முடிவு வந்திருந்தது. ஆம், கல்லூரியில் அவளுக்கு பட்டப் படிப்பு கற்பதற்கான இடம் கிடைத்து விட்டது. கல்லூரியின் முதல் நாள், கல்லூரி வாசலில் காலடி எடுத்து வைத்தாள். அவளுக்கு ஒரு சில தோழிகளும் கிடைத்தனர். ராஜேஷ், அவ்விடத்திற்கு வந்தான், ஆதிரையைக் கண்டதும் சிரித்தான். பதிலுக்கு அவள் முறைத்தாள். அனைவரிடமும் இலகுவாக பழகும் குணமுடையவன் ராஜேஷ். ஆண்கள் என்றாலே வெறுப்பில் இருக்கும் ஆதிரையின் செயல் ராஜேஷுக்கு பெரும் வியப்பைத் தந்தது. பேரழகி என்ற ஆணவம் போலிருக்கிறது என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டான்.

இருப்பினும் அவன் அவளைத் நோட்டமிடச் செய்தான். வகுப்பில் பாடத்தை மட்டுமே கவனித்தாள், ஆதிரை. நாட்கள், மாதங்கள், வருடங்கள் என காலம் ஓடியது. ஆதிரை மட்டும் ராஜேஷை கவனிக்கவே இல்லை. பல முறை அவளிடம் பேச முயற்சித்தும் சினத்தையே காட்டினாள். குழம்பினான் ராஜேஷ், எல்லாரிடமும் அன்பாகப் பழகும் என்னிடத்தில் கோபத்தை வீசுகிறாளே, அவள. ஏன் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை. என பல கேள்விகள் அவனுள். எல்லாரும் தம்மிடம் வேறுவிதமாக பழகும் பொழுது இவள் மட்டும் ஒரு ரகமாக இருக்கிறாளே, என்று அவன் மனம் அவளைப் பின் தொடர்ந்தது. அவன் எங்கிருந்தாலும் அவன் மனம் மட்டும் அவள் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தது. நேரம் காலம் இல்லாமல் அவளையே நினைத்திருந்தான்.

ஆதிரையின் தோழி ஒரு நாள் அவளிடம், "ஆமாம், நீ ஏன் ராஜேஷை வெறுத்து ஒதுக்கிறாய், அவனை உனக்குப் பிடிக்கவில்லையா" என்றாள்.
"எனக்கு ஆண்களைக் கண்டாளே, வெறுப்பாக உள்ளது, சிறு வயதிலிருந்தே அப்படியே தோன்றிவிட்டது, அதிலும் ராஜேஷ் எப்பெழுதும் பல்லைக் காட்டுகிறான், என்றாள் ஆதிரை.
அதற்கு அவள் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, " இதோ பார் ஆதிரை, ராஜேஷ் ஒன்றும் தப்பானவன் கிடையாது, அவன் சிட்டியில் வளர்ந்தவன், அப்படித்தான் எல்லாரிடமும் சகஜமாக பழகுவான். இது நாள் வரை எல்லாப் பெண்களிடமும் சிரித்து கிண்டல் அடித்தும் கூட இருக்கிறான், ஆனால் யாரிடமும் எல்லை மீரியதில்லை தெரியுமா" என்றாள்.

தன் தோழி் அவனைக் பற்றிக் கூற கூற ஆதிரை, "அவனிடம் அப்படி நடந்துக் கொண்டிருக்க கூடாது, தவறு செய்து விட்டோம்" என மனதிற்குள் மனம் வருந்தினாள். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்கள். ஆதிரையின் கல்லாய் இருந்த மனமும் ராஜேஷ் எனும் எறும்பால் தேய ஆரம்பித்துவிட்டது.

5) கொலையா? தற்கொலையா?

ஆதிரை அன்று கல்லூரிக்கு பணத்தை கொண்டு வர மறந்துவிட்டாள். அன்று உணவருந்தாமல் பட்டினியாக இருந்தாள். இதனை கவனித்த ராஜேஷ் அவள் நிலை புரிந்துக்கொண்டு அவளிடம் பணத்தை நீட்டினான். ராஜேஷ் பணத்தை காட்டியதும் ஆதிரை அவனை தவறாகப் புரிந்துக் கொண்டு கடுமையாக திட்டினாள். சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி இவர்களையே வேடிக்கைப் பார்த்தனர். அனைவரும் கேலியும் கிண்டலுமாக இவன் முகத்தையே பார்த்ததில் ராஜேஷுக்கு அவமானமாக இருந்தது. பிறகு உண்மை புரியாமல் ஆதிரை அழுதுக் கொண்டே சென்று விட்டாள்.

அக்காள் பார்வதி அன்று தலைவலி என்று வேலைக்குச் செல்லவில்லை. வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டிருந்தாள். மழை ஒருபுறம் வெளுத்து வாங்கியது. அச்சமயம் தலையில் இடி விழும் தகவல் ஒன்று வந்தது பார்வதிக்கு. ஆம். ஆதிரை தற்கொலை செய்துக் கொண்டாள் என்று. பதறிப் போய் தன் அம்மா காமாட்சியையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றுப் பார்த்தாள், அங்கே அவளின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறினர்.

அம்மா காமாட்சி துக்கம் தாங்காமல் கதறி... கதறி அழுதாள், இதனைக் கண்ட பார்வதி தாங்கிக் கொள்ள முடியாமல் இன்னும் அழுதாள். ஒரு வழியாக பார்வதி, அம்மா காமாட்சியை சமாதானம் செய்து அங்கிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே ஒரே காவல்துறையினர் அங்கும் இங்குமாக சென்றுக் கொண்டிருந்தனர்.

பார்வதி அம்மா காமாட்சியை ரிசப்ஸன்ட் அருகிலுள்ள ஒரு நாற்காளியில் அமர வைத்துவிட்டு, நர்ஸ் ஒருவரிடம், துக்கம் தொண்டையை அடைக்க பேச வார்த்தை வராமல், "சிஸ்டர், என் தங்கை ஆதிரைக்கு என்னாச்சு, நான் அவளைப் பார்க்கனும்" என்றாள் பார்வதி.

"ஓ, ஆதிரையோட அக்காவா நீங்க, யாரையும் பார்க்க அனுமதிக்ககூடாது என்று இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். அதோ பாருங்க அங்கே வரார் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்த்து உத்தரவு வாங்குங்கள்" என்றாள்.

"இன்பெக்டரா நாங்கள் ஏன் அவரிடம் உத்தரவு வாங்க வேண்டும்" கேட்டாள் பார்வதி.

"மேடம் இது போலிஸ் கேஸ், அவர்கள் அனுமதியில்லாமல் யாரையும் அனுமதிக்க முடியாது என்றாள்".

நர்ஸ் அப்படி கூறியதும் பாரவதி முகம் மேலும் இருண்டு, கண்கள் கலங்கின. பாரவதி மனதுக்குள், அப்படியென்றால் ஆதிரை இறந்து விட்டாள் என்பது உண்மைதானா?

அச்சமயம் அங்கே வந்த இன்ஸ்பெக்டரின் முன்னால் நின்றாள் பார்வதி, "யார் நீங்கள்" என்று இன்ஸ்பெக்டர் கேட்கும் முன்னமே, அருகில் இருந்த நர்ஸ், " சார், இவங்க ஆதிரையோட அக்கா" என கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இன்ஸ்பெக்டர் பாரவதியைப் பார்த்து, "நீங்கள் இறந்துப் போன ஆதிரையின் அக்காவா? உங்கள் பெயர்"? என்று கேட்டார்.

" ஆமாம் சார், ஆதிரை என் தங்கை என் பெயர் பாரவதி, அருகில் அமர்ந்திருந்த காமாட்சியைக் காட்டி அவர் அம்மா காமாட்சி" நாங்கள் ஆதிரையை பார்க்கனும்" என்றாள்.

வாருங்கள் என்று இன்ஸ்பெக்டர் பிரேதம் இருக்கும் இடத்தை காட்டி போய் பாருங்கள் என்றார்.

பார்வதி, ஆதிரையின் உடலைச் சென்றுப் பார்த்தாள். ஆங்காங்கே, கீறல் தடயங்கள் தென்பட்டது. உடனே பாரவதி போலிஸ்காரர்களை அழைத்துக் காட்டினாள்.

"சார், ஆதிரை கொலை செய்யப்பட்டிருக்கிறாள், தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, பிரேதப் பரிசோதணை முடிவு வேண்டும்" என்றாள். அனைவரும் மௌனம் காத்தனர். ஒரு போலிஸ், இன்பெக்டருக்கு தகவல் கூறினான். உடனே இன்ஸ்பெக்டர் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு "சார், இந்த பெண்ணோட அக்காள், வந்து ஆதிரை தற்கொலைச் செய்யப்படவில்லை, கொலைச் செய்யப்பட்டிருக்கிறாள் என்று பிரச்சணை செய்கிறாள், எவ்வளவு சொல்லியும் அடம் பிடிக்கிறாள்" என்றார்.

எதிர்முனையில், "விஷயத்தை சொல்லிவிடுங்கள் நான் உடனே வருகிறேன்" என்றது அக்குரல்.

இன்ஸ்பெக்டர், சரி சார், என்று அலைப்பேசியின் தொடர்பை துண்டித்துவிட்டு, பார்வதியை நோக்கி இன்ஸ்பெக்டர் வந்தார்.

"பார்வதி இங்கே வாங்க, நீங்கள் சந்தேகப்படுவது சரிதான், உங்கள் தங்கை ஆதிரை கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள். ஆதிரை ராஜேஷ் என்ற பெரிய இடத்துப் பையனை அனைவரின் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ் ஆதிரையை கற்பழித்துக் கொன்றுவிட்டான்", என்றார்.

பார்வதியும் அவள் அம்மா காமாட்சியும் கதறி அழுதனர்.

"நான் விட மாட்டேன், கொன்றுவிட்டு தற்கொலை என்றா நாடகம் ஆடுகிறீர்களா, நான் சும்மா விடமாட்டேன்" என்று கத்தினாள் பாரவதி.

"சும்மா கூச்சல் போடாதீங்க, உங்களால் அவர்களை எதிர்க்க முடியாது, அந்த பையன் ராஜேஷ் பெரிய இடம். அவர் அப்பா யார் தெரியமா"? இன்ஸ்பெக்டர் கேட்க.

பின்னாலிருந்து ஒரு குரல் "ராஜ ராஜேந்திரன், சூப்ரீம் நாளிதழ் உரிமையாளர்" என்று கூறிக் கொண்டே கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்த பார்வதியை நோக்கி அருகே வந்து, "இதோ பார், என் மகன் ராஜேஷ் உன் தங்கையை கொலை செய்தானா! இல்லையா! என்று எனக்குத் தெரியாது, ஆனால் சாட்சிகளும் சூழ்நிலைகளும் அதற்கு எதிராகத்தான் உள்ளது. படிக்கும் பையன் வேறு நானும் வழக்கு அது இதுன்னு அலைய முடியாது. உன் குடும்பத்தை வேறு இன்ஸ்பெக்டர் கூறினார், உன் குடும்பத்திற்கு வாழ் நாள் விமோசனம் தருகிறேன். ஞாயம் அநியாயம் பார்த்தால் இறந்துப் போன உன் தங்கை மீண்டும் போவதில்லை, அப்படியே நீ வழக்குப் போடனும் நினைத்தால் என்றால் வக்கீல் சார்ஜ் கட்ட பணம் உள்ளதா உன்னிடம்"? என்றார் ராஜ ராஜேந்திரன்.

பார்வதி யோசிக்க ஆரம்பித்தாள். "கோர்ட்டு கேஸ்ஸுன்னு சமாளிக்க ஆண்ளும் இந்த வீட்டில் இல்லை" என்று மனமில்லாமல் ராஜ ராஜேந்திரன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கப்பூர் சென்று விட்டாள். அங்கேயே வேலை செய்து அலெக்ஸ் என்ற தொழிலதிபரையும் மணமுடித்துக் கொண்டு வாழ்ந்தாள். நினைவலைகளிலிருந்து திரும்பிய பார்வதியின் கண்கள் ஆதிரையை நினைத்து குளமாகின.

6) ஆதிரையின் ஆத்திரம்

பார்வதி தன் கணவன் அலெக்ஸ் மற்றும் தன் அன்னையை அழைத்துக் கொண்டு தன் சொந்த நாட்டுக்கு வந்தாள்.

சித்தரின் முன்னிலையில் பார்வதி, ராஜ ராஜேந்திரன் மற்றும் அம்மா காமாட்சி. பார்வதி கண்கள் கலங்கியபடியே "என் ஆரிரையை அழையுங்கள் நான் அவளிடம் பேசனும்" என்றாள்.

சித்தர் பூஜைகள் செய்து ஆதிரையின் ஆன்மாவை வரும்படி கட்டளையிட்டார். அடுத்த கணம், ஆதிரையின் ஆன்மா ராஜ ராஜேந்திரனின் கழுத்தை பிடித்து கொல்ல முயன்றது.

" நிறுத்து உன் பழி வேட்டையை" சித்தரின் ஆவேச குரலால் ஆதிரையின் பிடி விடுபட்டது.

"ஏன் ஆதிரை இப்படி செய்கிறாய். உனக்கு என்னாச்சு, ஏன் அவரை கொல்ல துடிக்கிறாய்.

பார்வதிக்கு ஆதிரையின் உருவம் தென்படாவிட்டாலும் அவளின் அழும் குரல் கேட்டது. ஆதிரை...என அழைத்தாள், பார்வதி.

ஆதிரை நடந்ததை கூற முயன்றாள். " நான் ராஜேஷை என்னை அறியாமலே எனக்குள்ளேயே காதல் செய்தேன். அவனின் இயல்பான குணத்தை நான் ரசித்தேன். ஆனால் அவன் மற்றவர்களிடம் பழகுவதைப் போல் என்னிடமும் பழகுவது எனக்கு பிடிக்காமல் தான் அவனிடம் ஒரு சில சமயங்களில் வெறுப்பை வெளிப்படுத்தினேன். அன்று சற்று அளவுக்கும் அதிகமாக கடிந்துக் கோண்டதை நான் உணர்ந்து மன்னிப்பையும் என் காதலையும் வெளிப்படுத்த அவனைத் தேடிச் சென்ற சமயம் தான் இரு குடிக்காரர்கள் என்னை அனுபவித்துக் கொன்று விட்டனர். ஆனால் என்னை கொன்றது ராஜேஷ் என நம்பி நான் தற்கொலைச் செய்து கொண்டதாக அனைத்தையும் பணம் விட்டெறிந்து சாட்சிகளை முடக்கி உண்மை குற்றவாளியை தப்பிக்க விட்டார்" என்றாள்.

"ஆதிரை, அவர் நம் குடும்பத்தை வாழ வைத்த நல்லவர், அவர் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தான் உண்மை என்னவென்று அறியாமல் அப்படி செய்து விட்டார். அவருக்கும் நடந்த உண்மை இப்பொழுதுதான் தெரியும். எங்களோடு நீயும் தற்பொழுது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று அழுதாள் பார்வதி.

ராஜ ராஜேந்திரன் ஆதிரைக்கு நிகழ்ந்த கொடுமையைக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டார். சற்று நேரத்தில் "அக்கா எனக்கு வேலை வந்து விட்டது, அவன் என் கண்களுக்கு தெரிகிறான். இன்றோடு அவன் கதையும் முடிகிறது" என்று ஆக்ரோஷமாக கிளம்பியது ஆதிரையின் ஆன்மா.

- முற்றும்

எழுதியவர் : பவநி (23-Apr-19, 1:22 pm)
பார்வை : 127

மேலே