சோறு

பாட்டி நான் பக்கத்து கிராமத்திலிருந்து வர்றேன். இந்தி தொலைக்காட்சி தொடர் பாக்கறதுதான் உங்க பொழுதுபோக்குன்னு கேள்விப்பட்டேன். இருமது மைல் சுற்றளவில உள்ள கிராமங்கள்ல பொறக்கற கொழந்தைங்களுக்கெல்லாம் நீங்கதான் அழகான இந்திப் பேருங்கள வைக்கறீங்களாம். அதான் உங்களப் பாக்க வந்தேன்.
@@@@
சரி தம்பி. நீ எந்த ஊரு.
@@@@
நான் வெலவலத்தான்பட்டியிலிருந்து வர்றேன். எம் பேரு செல்லப்பன். என்னோட மனைவி பொன்னி ஆண் கொழந்தை பொறந்து நாலு நாளு ஆகுது. தமிழ்ப் பேரு வச்சா சரிப்படாதுன்னு தான் உங்களத் தேடி வந்தேன். ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லுங்க பாட்டி.
@@@@@
'சோறு'-ன்னு வையுடா. தொலைக்காட்சில நான் அடிக்கடி கேட்ட வார்த்தை.
(பாட்டியின் பேத்தி குறுக்கிட்டு)
'சோறு' இல்லங்க பாட்டிம்மா. 'சோர்'.
@@@@@
சரிடா செல்லப்பா. எம் பேத்தி சொல்லற மாதிரியே உம் பையனுக்கு வச்சிருடா. அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாது.
@@@@@
இந்திப் பேருக்கெல்லாம் யாரும் அர்த்தம் பாக்கறதில்ல. 'சோர்' சோரான பேரு. அதையே வச்சிடறேன் பாட்டிம்மா. ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா. நான் வர்றேன்.
@@@@@
மவராசனா போயிட்டு வா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Chor = thief.

எழுதியவர் : மலர் (23-Apr-19, 8:20 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : soru
பார்வை : 165

மேலே