நம்பித்தான் போனது

விழிகள் நம்பித்தான் போனது நாள்தோறும் உன் முகம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று
விரல்கள் நம்பித்தான் போனது நொடி பொழுதும் உன் விரல்கள் கோர்க்கலாம் என்று
உதடுகள் நம்பித்தான் போனது நாளெல்லாம் உந்தன் பெயர் மட்டுமே உச்சரிக்கலாம் என்று
இதயம் நம்பித்தான் போனது உன்னை பிரிந்தால் துடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று
நம்பியது ஏதும் நடக்கவில்லை நடந்ததை நம்பவும் முடியவில்லை!
நிகழ் கால தருணங்கள் எல்லாம் இறந்த காலம் ஆகும் என்று அறிந்திருந்த நான், நிகழும் இந்த காலத்திலேயே நம் காதலை இறந்த காலம் ஆக்கி விட்டேனே?

எழுதியவர் : அமர்நாத் (25-Apr-19, 12:55 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : nambithaan ponathu
பார்வை : 131

மேலே