இருளை விரட்டு

அந்தியில் அழகுகாட்டும்
கதிரவனே,
ஓய்வெடுக்கச் செல்கிறாய் நீ
இன்றும்
ஒழுங்காய்ப் பணிமுடித்த நிறைவில்..

ஓய்வெடுக்கச் செல்கின்றன
வழக்கம்போல் பறவைகளும்,
பணிமுடித்து
இரைதேடிய நிறைவில்..

இந்த மனிதன் மட்டும்
ஏன் இப்படி,
நீ பணிமுடித்தபின்
இரவின் இருள்வரவில்
இவன் பணியைத்
தொடங்கிவிடுகிறானே,
ஆக்கப் பணியாய் அல்ல-
அழிவுப் பணியாய்..

இரவின் இருளை
இரவியே நீ
இவன்மனதில் புகுத்திவிட்டாயா..

இதை விரட்ட
நீட்டு
உடனே உன் ஒளிக்கிரணங்களை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Apr-19, 7:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே