என் மனத்தீவிலே
காற்றோடு பூவும் புன்னகை தூறும் தூறலில் நானும் நனைக்கிறேன்
என் கண்ணோடு உன் கண்கள் உணர்வோடு பேசும் மெளனதில் நானும் உறைகின்றேன்
கலை கண்ட கண்கள் விலை காண்பதில்லை நம் காதலில் நாமும் பிழைகாண்பதில்லை என்றே நானும் உணர்கிறேன்
உன்னாலே என்னுள் உருவான காதல் உணர்வல்ல உலகம் என்றே நான் வாழ்கிறேன்
மழலை மொழி போல் மனதிற்குள் ஒலிக்கும் தனிக்கதைகள் பேசி தனிமையில் நான் சிரிக்கின்றேன்
சிறு ஆற்றின் நடுவில் ஒரு ஓடை கலக்க பெருவெள்ள நதியாய் உன் நினைவுகள் ஒடிட குரும்பாறை மணலாய் நான் படர்கின்றேன்
என் அன்பான கள்வா உன் அன்பாலே என்னை இழந்தவள் நானும் நம் மணநாளை காணும் கனவோடு நாளும் துகில்கின்றேன்
நம் பிரிவால் உன் நினைவால் என்னுள் எந்நாளும் நம் மணநாளே என் மனத்தீவிலே என்றும் உன்னோடு தான் நான் வாழ்கிறேன் என் உயிர் கூட்டிலே
உன் விரலோடு என் விரல் சேரும் பொழுதில் நீ அறியாத உன் தாயின் அறிமுகமாவேன் உன் தாயும் சேயும் நானாவேன்
இரு கடலாய் இருந்த நம் அலைகள் ஒரு நதியாய் தவழ்ந்து படலும் புது யுகம் காண வருவாயோ என்னை மணம் காண வென்று பூந்தென்றலே சென்று அவரிடம் சொல்வாயோ இன்று.