சிவ சக்தீ
சிவ சக்தீ
************************
மணலையே லிங்கமாய் மனங்குவிந்து அமைத்தவளே
மணலையும் மனங்கனிந்து மார்புடன் அணைத்தவளே
மணலாய்ப் புழுதியாய் மண்ணோடி அலைகின்றேன்
மணலென்மேல் கருணைமழை பொழிவாய் சிவ சக்தீ !