ஒரு உடல் பல மனம்

"சில மனம் இச்சையோடு ஓடி விழுந்து சிக்குண்டு சின்னாபின்னம் ஆகி வாழ்கைக்கு சிறையாகிறது..."
"சில மனம் நீர் இல்லாத பயிர் போல செழிப்பு இல்லாமல் ஏனோ தானோ என்றவாறு நகருகிறது.."
"சில மனம் காகித தாளை(பணம்) உணவாக உண்டு ஏப்பம் விட்டு விட்டு இதோ! மீண்டும் உண்ண தயாராகிறது.."
"சில மனம் அன்றாட கஞ்சிக்கு அல்லல் பட்டடாலும் நிம்மதி என்ற விசிறியின் குளிரால் தூங்குகிறது...."
"சில மனம் யதார்த்தத்தை தேடி திசைகளாக சுற்றி இறுதியில் சரணடைகிறது...."
"சில மனம் இதய மரங்களுக்கு அன்பு நீர் ஊற்ற முன்னும் பின்னுமாக அலைந்து திரிகிறது..."
"சில மனம் வலிகளை முதுகில் மூட்டையாக்கிக் கொண்டு முயற்சி என்ற வாளை ஏந்தி கொண்டு சமூகத்திற்குள் தன்னை பச்சைகுத்துகிறது..."
"சில மனம் ஒரே வழி பாதையில் இறைவனை தேடி அவனுடன் பின்னிப் பினைந்து இறைஅமைதி அடைய உலகம் கொச்சையாகிறது...."

எழுதியவர் : இஷான் (4-May-19, 4:25 pm)
Tanglish : oru udal pala manam
பார்வை : 169

மேலே