சிற்றோடை

சிற்றோடை !

சிற்றோடையில் சிதறி
விழும் துளிகள்
தொலைவில் இருந்து
பார்ப்பதற்க்கு மின்னிடும்
வெள்ளி பூக்களாய்

பாறைகளின் இடுக்குகளில்
நெளிந்தும் வளைந்தும்
கிச்சு கிச்சு மூட்டி
சிருங்கார சிரிப்புடன்
வெட்கப்பட்டு ஓடி
செல்லும் நீரோடை !

சட்டென்று ஓரிடத்தில்
வெட்கப்பட்டு தயங்கி
அக்ன்ற ஆண்மை கொண்ட
அகல்மான ஏரிக்குள்
தன்னை உள் நுழைத்து
சங்கமமாய் விடும் இந்த
நீரோடை பெண்

வெட்கப்பட்டு வந்தோடி வரும்
அனைவரையும் தன்னுள்
அடக்கி வைத்து அமைதியாய்
புன்னகை பூக்கும் ஏரி !

கோபித்து விலகி ஓடும்
நீரோடை பெண்ணுக்கும்
புன்னகையுடன் வழி விட்டு
அனுப்பி வைக்கும் கால்வாய் !

இவர்களின் ஊடலுக்கும் கூடலுக்குள்
மனம் நிறைய சுகம்
காணும் பல் உயிர்
ஜீவன்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-May-19, 4:39 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 171

சிறந்த கவிதைகள்

மேலே