உடுக்கை இழந்தவன் கைபோல

வார்த்தை எனும் மலரெடுத்து
வரிகளை கருத்தாக தொடுத்து
எண்ணத்தை அழகுற அமைத்து
வண்ணமிகு கவிமாலை வடித்து
அனுபவங்களை உருவம் கொடுத்து
என்வழியில் நாளும் எடுத்துரைத்து
பலரின் பார்வைக்காக படைத்து
அனுதினம் அவைக்கு அளித்து
அனைவரும் ரசித்திட நினைத்து
என்மனமோ எந்நேரம் துடிக்குது
உடல்நலமோ பலநேரம் தடுக்குது
ஆனாலும் அலைபேசி உதவுது
படுக்கையில் இருப்பினும் முடியுது
பதிவிட முகநூலில் அவ்வப்போது
உடுக்கை இழந்தவன் கைபோல !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-May-19, 9:26 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 437

மேலே