கல்லான இதயத்திலும்
கண்ணுக்குள் கொன்டேன் உன்னை
என் கல்லான இதயத்திலும்
கச்சிதமாய் புகுத்தி விட்டேன் காதலை
அது ஓவியமாய் இருக்குமென்று ,
ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை
காவியமாய் மாறிவிட துணிந்தது
நிஜக் காதல் பசுமையின் கோலமாய்
என்னுளே பக்குவமாய் பசுந்தளிர்கள்
கொள்வனவு கொண்டன இதயத்தையே,
கல்லுக்குள் ஈரமுண்டு கண்டு கொன்டேன்
கன்னியே உன்னை கண்டதனால்
ஈரமதை கண்டேன் என் இதயத்தில்
இனி நான் உன் வசமே , உன் வசமே,
அன்பே காதல் கொண்டாய் என்னிடத்தில்
புரிந்தது என் உணர்வில் உளம் முழுக்க நீயே
நானும் நிறைந்திருப்பேன் உன்னிடத்தில்
சொல்லடி என் பைங்கிளியே உன் நினைவை
இனி நீயின்றி நானில்லை ஆருயிரே
கல்லாக இருந்த என்னை காதலிலே கனிய வைத்தாய்
நன்றி சொல்ல வார்த்தையில்லை
நலமுடனே நம்காதல்
வாழ்ந்திடத்தான் வாழ்த்துகிறேன் அன்புடனே .