மடல்

காண்கின்ற கனவுகளில்
வசந்தமான வாழ்வது
எட்டிப் பார்த்து சென்றுவிட
ஏடெடுத்து மடல் வரைகின்றேன்
மங்கையவளுக்கு...

நீ இங்கு நலம்...
நானும் இங்கு நலம்

எடுத்துச் சென்றதனை
எல்லாம் திருப்பித் கொடுத்தாய்

மனமதனை உன்
முந்தானையில் முடிந்தாயோ...!
மூச்சுத் திணறலுடன் நான்

மூழ்கிப் போன கனவுகளை
மூச்சடக்கி தேடியும்
எண்ணெய் குடித்த நீர்போல்
மூழ்கவிடாமல் மேலேற்றியபடி
உன் நினைவுகள்...

தடாகம் பசுமை போர்வையில்
பசலையில் நான்

கடந்து சென்ற கனவுகள்
கடக்கமுடியா நிகழ்வுகள்
திருப்பித்தான் கொடுத்துவிடு - உன்
முந்தானையில் முடிந்த மனதினை...

என்றுதான் எழுதி முடித்தேன்
இதுவும் அனுப்பப் படாத கடிதமாக
சுவடின்றி ஏதோ - ஓரு
சுவற்றின் அரவணைப்பில்...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (5-May-19, 2:02 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : madal
பார்வை : 98

மேலே