கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

இராவெல்லாம் ஓடி
விடியலின் விளிம்பு பற்றி
மூச்சிறைக்க்க நிற்கிறது…
அந்த நாள்…….

நித்திரையின் கையுருவி
இமைகளில் சாவியிட்டு
மெல்லக் களைகிறது
அந்தக் கனவு……..

விழித்திரை ஏனோ
மீண்டும் மீண்டும்
திரையிட்டுக் காட்டுக்கிறது
அக்கனவை…….

மூடிய விழிகளுக்குள்
விழுந்திட்ட தூசியாய்
அழுந்திக்கொண்டே…..
என் பொழுதுகளை…..
அக்கனவு…
…..
மெய்ப்படவேண்டி
ஒடுக்குகிறேன் மனதினை
அக்கனவின் கரு மையத்தே…..

கால அலைகளில் கரை ஒதுங்காது
வேர் பதிக்கிறது…
அக்கனவு…
இதயத்தின் ஆழத்தே……..


பொன்னிறக் கதிரேந்தி
புலர்கிறது ஓர் நாள்….
உயிருற்ற அக்கனவு
உருப்பெற்று என் முன்னே…...




சு. உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (5-May-19, 2:42 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 166

மேலே