அப்படி என்னை பார்ப்பது ஏன்டீ
அப்படி என்னை பார்ப்பது ஏன்டீ
கெட்டது அதனால் என் மனம்தான்டீ
உன் காந்த விழியால்
என் இரும்பு நெஞ்சை
தினம் ஈர்த்துச் செல்வது ஏன்டீ
உன் வெட்கத்தைத் தாண்டி
என் பக்கம் நெறுங்கி வாடீ
கட்டினால் தாலி
உன் கழுதினில்தான்டீ
இல்லையேல் வளர்ப்பேன்
உன் நினைவால் தாடி
என் தாடிக்கு பின்னால்
இல்லையென்றால் லேடி
அதை ஏற்குமா இந்த உலகம்தான்?
நான் தினம் காண்பதெல்லாம்
உன்னெழில் முகம்தான்
அப்படி என்னை பார்ப்பது ஏன்டீ
கெட்டது அதனால் என் மனம்தான்டீ
காதலித்தப் பெண்ணை
மறப்பது கடினம்
ஆண்களை பெண்கள்
வெறுப்பது சுலபம்
புதிரானதும் புரியாததும்
இந்தப் பெண்ணினம்
உண்மை தெரிந்த பின்னும்
விரும்புதே பெண்ணை ஆண்மனம்
நீ பிரிந்தால் என்னுசுரு
இனி இங்கு எப்படி வாழும்?
நீ இன்றி என்னுடலு
மண்ணில் வீழ்ந்து
மடிந்து போகும்!
அடிப் பெண்ணே
அதற்கு முன்னே
வந்து வாழ வை என்னை
காதற்கண்ணே...
மறவாதே அன்பே...