ஆசிரியரின் குரல்
#ஆசிரியரின் குரல் #
அ உ சொல்லி தந்த
ஆசிரியரை மறக்கலாமா..
மாடு கண்ணு மேச்சவன
மனுசன வச்சோமுங்க...
ஏணியா தான் நின்னோமுங்க
எட்டி தானே நீ உதைச்சிடியே...
தன் சுத்தம் சுகம் சொல்லி தந்தோம்
சூழ்ச்சி தானே நீயும் செஞ்ச.
குப்பையிலே இருந்த உன்னை
கோப்பு படிக்க வைச்சோமே..
தப்பு தானே செஞ்சோமுங்க
சாத்தியமா சொல்லுரேன்
தப்பு தானே செஞ்சோமுங்க
அ உ சொல்லி தந்து...
கோபுரத்தில் ஏத்தி விட்ட
குருக்களை மறக்கலாமா...
கோபுரத்தில் நின்னுக்கிட்டு
கொக்கரிப்பு செய்யலாமோ.
அந்தரத்தில் தொங்கலமோ
அடித்தளம் இல்லாமலே..
சொந்த காலில் நிக்கலமா
பூமி உன்ன தாங்காமலே...
பலி பாவம் வேணமுங்க
பக்குவமா நீயும் யோசி
பாடையிலெ போகுமுன்னே...