விலைமகளாகும் உரிமை

உன்னை கைப்பாவையாக கையாட துடிக்கும் கயவர்களிடமிருந்து உன்னைக் காத்துக் கொள் !!!

அடிமைச் சந்தையில் உன் உரிமையைப் விலை பேசி விடாதே !!!

சில ரூபாய் நோட்டுகளுக்காக உன் உரிமைகளை விற்று வரும் காலத்தை வரட்சி ஆக்கிவிடாதே!!!

வியாபாரச் சந்தையில் உன்னை விலைமகளாக்க விழைகின்றனர் பெரும் அரசியல்வாதிகளும் பெரும் பணமுதலைகளும்!!!

பொறுத்தது போதும் பொங்கி எழு!!! எப்படி சாதுரியமாய் உன் உரிமைகள் களவாடப்பட்டததோ அதே போல் மிகவும் சாதுரியமாக மீட்கப்பட வேண்டும்!!!

உன் சிறு சிட்டிகை எண்ணம் நாளை பல்கிப் பெருகி பெருங்கடலாய் மாறி ஆழிப் பேரலையாய் கயவர்களை அடித்துச் செல்லட்டும்!!!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உன் தகுதிகளை தரமாக்க போராடும் உனக்கு தலைவனாய் வாய்ப்பவனுக்கு சில தகுதிகள் வேண்டாமோ?

உன் பிழைப்பில் நர்த்தனமாடி உன்னை பரிகசித்த தலைவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டாமோ?

காமராஜரரும் படிப்பறிவற்றவர் அவரைப்போல் நாங்கள் என்ற போர்வைக்குள் எத்துணை தினம் ஒளிந்து கொள்ள முடியும் இக்கயவர்களால்!!!

சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஓரிருவர் இருக்கலாம்!!! தாமரைக்கும் அரளிக்கும் வித்தியாசம் அறியாமல் நாட்டை தூக்கி கையில் கொடுத்து விட்டோமே!!!

இனியும் கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் கொண்டு வாக்களிக்கும் மாயையை துரந்திடுவோம்!!!

நாளை ஒருநாள் நாம் எடுக்கப் போகும் முடிவால் பெரும் மாற்றம் நிகழப்போவதில்லை எனினும் காலம் பதில் சொல்லும்!!!

வரும் சந்ததியினர் விழித்துக் கொல்லட்டும் பகுத்தறிவால் !!!

அரசியல் என்றால் சாக்கடை என்று அர்த்தம் கொண்ட நாம் அகராதியில் உள்ள அர்த்தத்தை மீட்டெடுப்போம்!!!

வருங்காலத்தில் நல்ல அரசியல் தழைக்கட்டும்!!! ஊழல் அரசியல் ஒழியட்டும்!!!

எழுதியவர் : மீனாட்சி (8-May-19, 7:44 pm)
சேர்த்தது : Meena AK
பார்வை : 43

மேலே