அந்திமாலை மயக்கம்

படபடக்கும் பட்டாம் பூச்சியை
இன்று கண்டேன் உந்தன் பார்வை பூக்களில்....!

முழு இயற்கை எழிலை
இரசிக்கும் முன்னே
உன் கண்னெனும் மின்சாரத்தால்
தாக்கினாய் என்னை!

என்செய்வேன் - நான்
பூஞ்சோலையைச் சுற்றும் வண்டானேன்

புன்னகை பூத்த
செவ்விதழைக் கண்டு
மெல்லிசைப் பாடி
தேன் அருந்த வந்தேன்

இராணியே
இந்த வேலைக்கார தேனீயை
விரும்பினால் என்ன கொஞ்சம்?
நான் உன் மடியில் கிடைப்பேன் தஞ்சம்!

சிறு துடி இடை
நதி வளைவில் வீழ்ந்து
இன்பக் கடலை அடையும் நாள்தான் எந்நாளோ?
அந்நாள்தான் நம் வாழ்வின் முதல் நாளோ?
தேன்நிலவில் உலாவி மகிழ்வோம்
வா...அன்பே...வா!
தேக்கிவைத்த ஆசையை
உடைத்தெறிவோம்...
பக்கம் வா அழகே வா!!
வெட்கம் கொண்டது போதும்
தடையைக் கடந்து சென்று
இன்பம் காண வேண்டும்
நம் உறவின் இரகசியத்தை
நீண்ட இரவுதானே கூறும்
அந்திமாலையில் தோன்றும் மயக்கம்
விடியக்காலையில்தானே தீரும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (8-May-19, 10:29 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 40

மேலே