உனக்காக விழியோரம் ஈரமாய் 555

என்னுயிரே...


அம்மன் கோவில் வாசலில்
நீ
வைத்தாய் முதல் புள்ளி...


என் இதயத்திலும் வைத்தாய்

உன் ஓரபார்வையால்...


முடிவு புள்ளி வைத்து

மாக்கோலம் முடித்தாய் வாசலில்...


என் இதயத்தில் பூக்கோலம்

போடுவாய் என்று காத்திருந்தேன்...


முடிவு புள்ளியை வைத்துவிட்டு

சென்றாயடி கண்ணே...


என் முதல் காதலை

உன்னுடன் பகிர்ந்தேன்...


என் இறுதி காதலும்

நீயே வேண்டுமடி...


காத்திருக்கிறேன் உன்

வருகை எதிர் நோக்கி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-May-19, 8:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1361

மேலே