பிரிவினை எதற்கு

மதத்தை யாரு இங்கு பிரிச்சா
சாதியை யாரு இங்கு வகுத்தா
அதனால் நமக்கு இலாபம் இருக்கா?
ஏழைக்கு உதவ யார் இருக்கார்?
இனக்குழுக்களால்தான் நடக்குது சர்க்கார்
சாதி மட்டும் இல்லையென்றால்
அரசியல்வாதி யோக்கியன்தான்

பரம ஏழையாய் ஆனாலும்
மூத்தவன் மூத்தவன்தான்
முன்னோடி தமிழன்தான்
மூத்தமொழி தமிழ்தான்
ஊருக்கே சோறுபோடும்
மிக உயர்ந்தவன் உழவன்தான்
அவனை வெல்ல சூழ்ச்சி செய்து 
இன்று வாழ்கின்றான் உயர்ந்தவனாய்
சதி வலை பின்னுவதில் 
பார்ப்பனை மிஞ்ச எவனுமில்ல

மனிதனை மனிதன் 
தொட்டால் தீட்டென்று
ஒதுக்கி பார்க்கும் பார்ப்பானே
உன் பணத்தை நீட்டி
உன் சாதிக்காரனை
சுத்தம் செய்ய சொல்லிப்பாரு
உன்னைக்காரி துப்புவானே
அப்பதான் தெரியும் எனது பெருமை
முடிவெட்டும் தோழனுக்கு நீயும் அடிமை
உனக்கும் தெரியும் இந்த உண்மை
ஆனாலும் தடுக்குது கெளரவம் என்ப
உண்மையைச் சொன்னால் உனக்கு வலிக்கும்
நேரமானால் உனக்கும் பசிக்கும்
விவசாயிகள் இன்றி
உணவு பொருட்கள் எப்படி கிடைக்கும்?
தளைக்கு சிறப்பு வேருக்கு இல்ல
வேர்மட்டும் இல்லையென்றால்
நீ எப்படி நிற்ப உச்சியில
என் இரத்தத்தை உறிஞ்சி வாழும் உனக்கு
எப்படி புரியும் ஏழை எனது உணர்வு?

சாதியை வைச்சு சாதித்தவன் இங்கு யாருமில்ல
சாதியைச் சொல்லி ஏமாற்றிதானே
வாழுறான் பலர் ஊருக்குள்ள
ஏழையெல்லாம் ஒன்று சேர்ந்தால்
முதலாளிக்கு ரொம்ப தொல்ல
என்றுதானே பிரித்து ஆளுறான் நம்மை!
சாதி ஒன்று இல்லையென்றால் 
இங்கு அவனுக்கேது நன்மை?!

எழுதியவர் : கிச்சாபாரதி (9-May-19, 10:53 pm)
Tanglish : pirivinai etharkku
பார்வை : 212

மேலே