சதிக்கு கால் முளைத்தால்

வீதிக்கு வீதி சாதிதான் இருக்கு
சாதிக்குள்ள சாதி அடிமைபட்டுக்கிடக்கு
புரிந்துகொள் மானிடா
பிரிந்து நிற்பதேனடா

என்னதான் செய்தது உன் சாதி உனக்கு?
பணம் மட்டும் இல்லையென்றால்
உன் சாதியும் உன்னைத்தான் ஒதுக்கும்
அந்தச் சாதிக்காக நீ சாவது எதற்கு?

புரிந்துகொள் மானுடனே
எல்லா சாதியும் அடிமைதான்
காசு பணத்திற்கு முன்னே.....!

உன் சாதி என்ன?
என் சாதி என்ன?
சாதியைப் பார்த்தால்
அது நட்பு இல்ல
மனுசன மனுசன்
ஒதுக்கி வைத்தால்
அதற்கு பேரு மானுடமில்ல.......!

உயிர் இனங்களில் உயர்ந்தவன் மனிதனென்றால்
அதில் ஒன்றும் தப்பு இல்ல
உயர்ந்தவன் யாரு மனிதனுக்குள்ள?
நான்தான் உயர்வென்றால்

அவன் மனிதன் இல்ல...
இதுக்கு மேல நான் என்ன சொல்ல?

எழுதியவர் : கிச்சாபாரதி (9-May-19, 10:56 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 43

மேலே