தாய் அல்ல கடவுள்

தாய் அல்ல கடவுள் 🙏🏽

குடும்ப கோட்பாடுகளை
சற்றும் மதிக்காமல்
தரைமட்டமாக்கிய
மான்புமிகு மானுடமே
கொஞ்சம் நான் சொல்வதை கேள்
உன்னை பத்து மாதம் சுமையாக நினைக்காமல்
பகலிரவு என்று பாராமல்
தூக்கம் இன்றி சுமந்து
உன்னை ஈன்று எடுத்து
உனக்கு உயிரையும், மெய்யையும் கொடுத்து
தன் சுகதுக்கத்தை பாராமல்
உன்னை அரவனைத்து
ஆளாக்கிய தாயை
பச்சாதாபம் இன்றி
சுமையாக நினைத்து
மனசாட்சியை தூர எரிந்து
பெற்ற அன்னையை முதியோர் இல்லத்தில் அடைத்து விட்டாயே
நியாயமா
கொஞ்சம் யோசி...
மகா பாவம் தானே....
தவறு தானே ....
இன்று அன்னையர் தினம்
இன்று ஒரு நாளாவது அந்த உயர்ந்த உறவை தேடி சென்று, கண்டு குடும்பத்துடன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்
தயவு செய்து செய்த தவறுக்கு மண்ணிப்பு கேளுங்கள்
மீண்டும் உங்கள் இல்லத்திற்கு அழையுங்கள்
அவள் சம்மதிதாள்
மீண்டும் உங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்
தாய் என்ற கடவுளை தினம் போற்றி வணங்குங்கள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (12-May-19, 7:53 am)
சேர்த்தது : balu
Tanglish : thaay alla kadavul
பார்வை : 1152
மேலே