அவளுக்கு ஒரு கடதாசி💔
உன் நினைவுகள் கருவாகி,ஒரு குழந்தையாக வளருகிறது அதனை பராமரிக்கும் விதத்தை கொஞ்சம் பாறேன்.."
"அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்வேன்
நினைவுக் குழந்தை....
அசையப்படுகிறதா என்று...."
"இடைக்கிடையில் நினைவுக் குழந்தைக்கு முத்தம் வைத்து,அள்ளி எடுத்து கிள்ளிக்கொள்வேன்...."
"இனிதாக வருடி,இசையாக மாறி நினைவுக் குழந்தைக்கு தாலாட்டி உணவு ஊட்டுவேன்"
"அன்பு நீரை மொத்தமாகவே ஊற்றி அன்பில் நினைவுக் குழந்தையை நீராட்டுவேன்"
"சரி சொல்ல வந்த விடயம்....."
"நம் நினைவுக் குழந்தை பூமியில் சொட்டிய நாள் முதல் (என் அம்மா யார்????)
என்று கேட்டு கேட்டு கதறுகிறது நான் என்ன சொல்வது?? நீ திருமணம் செய்து விட்டாய் என்றா????