அலங்காரம்

பிறரை மிரட்டப் பயன்படும் அதிகாரம்
சதிகாரருக்கு அதுவே சரியான சதுர்வேதம்
மதியை பிறழ வைத்து
மனதை மயங்க செய்யும் கேடாயுதம்

சிறு பெண்கள் கவனம் சிதற
சிறுமை சித்தம் கொண்ட ஆண்கள்
சிறப்பாக புனைந்து கொண்டு
சிதைக்க கையிலெடுக்கும் பேராயுதம்

சிக்கலுக்கு மூலமாகி
சிறு பிரச்சனையை பெரிய தாக்கி
சில காலத்திற்கு சண்டை மூட்டி
சிறப்படையும் அரசியல்வாதிகளுக்கு அட்சயம்

கைம்பெண்கள் கைக்கொண்டால்
காமுகர்கள் கவ்வவந்து
கணக்கற்ற தவறுக்கு
கச்சித அச்சாரமாய் அமையும் சூலாயுதம்
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-May-19, 5:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : alangaram
பார்வை : 351

மேலே