அம்மா

மாற்றான் தோட்டத்தில் மாலையிட்டு!
மல்லிகை பூ கோர்வை தலையிலிட்டு!
உறவெனும் போர்வை போர்த்தி ஆண்டு பல தவமிருந்து
அருங்காட்சியகம் போல் கவனித்தாய் பத்து மாதம்
சுமை தூக்கி பாரம் மயக்கம்
ஈன்றெடுத்த தாய்மை நீ!
இராப்பகல் கண்விழித்து
ரதம் ஒட்டி

ஆராராரோ
கிளிப்பாடி உறக்கம் தேடச்செய்தாய்
உள்ளம் நெகிழ்ச்சி கொண்டே தெளிவை அறியும்படி
தேன் அமுதம் நீ
வார்த்து தேகத்தை உருக
விட்ட அன்னை நீ
உந்தன் கருணையில் அடிபணிந்தேன்
அன்பெனும் இயல் இசையாய்
இனிமையெனும் தமிழ் திசையாய்
அன்பை உணர வைத்து
தாய் என்ற அமுதாய்
என்றென்றும் சிறக்க வைத்தீர்
உம் பாசத்தில் நீரே
என் கருவிழியின் அன்னை

எழுதியவர் : கவிஞர் க. காளீஸ்வரன் (13-May-19, 1:59 am)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
Tanglish : amma
பார்வை : 405

மேலே