என் சிந்தனையில்

உன் எதிரியால் விழுப்புண்
அடைந்து விட்டாயா…
கவலைப்படாதே

எதிரிக்கு தெரிந்த உன்
பலவீனத்தை தெரிந்து
கொண்டதில் சந்தோசப்படு

*

தோல்வியென்னும் படியால்
ஏறித்தான் வெற்றியென்னும்
பரிசை பெறமுடிகிறது

*

வாழும்வரை
போராளியாய் இரு
நீ விபத்தில் இறந்தாலும்
அதுவும் வீரச்சாவுதான்

*

உலகமே தெரியாத குஞ்சு கூட
பாதையே இல்லாத ஓட்டை
உடைத்து வரும்போது

பாதைகள் நிரம்பிய
உலகத்தில் ஏன் கண்ணிருந்தும்
குருடனாய் வாழ்கிறாய்

*

விழுந்தால்
மண்ணோடு மண்ணாக
நீ இன்னும் சாகவில்லை

மறந்துவிடாதே…
இன்னும் நீ உயிர்
உள்ள விதை என்பதை

*

வெற்றியின் பெறுமதி
தோல்வியால்தான்
உணரமுடியும்

*

நம்பிக்கை ஊனமானல்
கால்களால் நடக்க முடியாது

*

திரும்பிப் பார்க்காமல் எவன்
ஓடுகிறானோ அவனே நம்பிக்கையோடு
ஓடுகிறான்

*

வாழ்கை என்பது நிரந்தரமில்லை
எனவே வாழ்வதற்காய் உழைக்காதே
வாழ்ந்துகொண்டே உழை

*

முட்களால் காயப்படமால்
பறித்த எந்த ரோஜாவின்
அருமையை யாரலும்
தெரிந்து கொள்ள முடியாது

*

இயங்கிக் கொண்டே இரு
நீ இறக்கவில்லை
என்பதையாவது
நிருபிக்க

*

காயப்படாமல்
புல்லாங்குழல்
ஆக முடியாது

*

வினாடிகளை விணாக்குபவன்
மணித்தியாலங்களை பற்றி
பேசக் கூடாது

*

அறிவுரைகளால் உன்னை
அடைகாக்க மட்டும்தான் முடியும்
நீதான் உடைத்து வெளிவரவேண்டும்

*

தோல்வியென்னும் புள்ளிகளால்தான்
வெற்றியென்னும் கோலம் போட முடியும்

*

உன் ஆணிவேர் ஆழமாய் இருந்தால்
எந்த சுனாமியாலும் உன்னை
எதுவும் செய்ய முடியாது

*

கண்ணாடிப் பெட்டிக்குள்
வாழ்ந்தாலும் மற்றவர்கள்
உன்னை பார்க்கும்படியாக
கடிகாரமாய் வாழ்

*

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய

*

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

*
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது *

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஒட்டாமே
*
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்
*
இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்
*
உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்
ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்
*
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

*
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

*
உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

*
வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்

*
தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

*
குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்ட
சிலையாகு

*
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

*
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

*

உன் உருவத்தை உனக்கே
காட்டிக்கொடுப்பது
கண்ணாடி

உன் உள்ளத்தை
மற்றவர்களுக்கு
காட்டிக்கொடுப்பது
உன் பேச்சு

*

யாரையும் தேவையில்லாம்
விலக்கி வைக்காதே வேணும்
என்றால் ஒதுக்கி வை

உனக்கு தேவை ஏற்படும்போது
அவர்களே தெய்வமாகவே
தெரியக்கூடும்

*

எல்லாம் தெரியும் எனக்கு
என்று நினைப்ப்தும்
எனக்கு தெரிந்த எதுவும்
யாருக்கும் தெரியாது என்று
நினைப்பதுவுமே மிகப் பெரிய
முட்டாள்தனம்

*

இந்த உலகம்
என்பது
ஒரு வகுப்பறை

நேற்று யாரோ
இன்று நாம்
நாளை யாரோ

*

அடுத்தவனின் நிழலில் நின்று
குளிர் காய்வதை விட
தனியாக நின்று கருகிப்
போவதே மேல்

*

தோல்விகள் மட்டுமே
உன் முயற்சிகளை
சோதிக்கும்

உன் முயற்சிகள்
மட்டுமே வெற்றிகளை
பெற்றுத்தரும்



*




இழப்புகளின் பெறுமதியில்
எந்த வெற்றியும் தீர்மானிப்பதில்லை

வெற்றிக்கான விருது அதற்கான
இழப்புகளின் பெறுமதியால் தீர்மானிக்க படுகிறது

*

மனிதனுக்கு ஞாபக சத்தி எவ்வளவு
அவசியமோ அவ்வளவு அவசியம் மறதியும்


*

வாழ்க்கை எனும் சதுரங்கத்தில்
உன்னோடு விளையாடுகிறது விதி

நீ வெல்ல வேண்டுமானால்
உனக்கான களச்சூழ் நிலையை
நீயே உருவாக்கு

எழுதியவர் : CITRA (30-Jul-10, 5:35 pm)
சேர்த்தது : B.CITRA
பார்வை : 630

மேலே