தோழி
என் தோளில் கை போடும் உரிமை
என் அன்னைக்கு பின் அவளுக்கு
நான் அறியாமல் செய்யும்
தவறையும் சுட்டிகாட்டுபவள்
என் தோற்றத்தை மட்டுமல்ல
என் பழக்கத்தையும் நோக்கத்தையும் மாற்றியவள்
என் சிந்தனயை சீவி
கூர்மையாக்கியவள்
என் நேரத்தை எப்படி செலவு
செய்ய வேண்டும் என்று கற்று கொடுத்தவள்
இவன் என் நண்பன் என்று
கர்வத்துடன் சொல்லுபவள்
என் முன்னேற்றத்திற்காக
ஏணி போல் நின்றவள்
இன்னொரு அம்மா அப்பா
அண்ணன் அக்கா தம்பி தங்கை
அவள் குடும்பத்தை அறிமுகம் செய்ததின் மூலம்
என் வாழ்கையை மாற்றி
புதியதாக அறிமுகம் செய்து
வாழ்கையை ரசிக்க கற்று கொடுத்தவள்
என் வீட்டு பெண்களுடன் பகிர்ந்து கொள்ளாததைகூட உன்னுடன்
பகிர்ந்துள்ளேன்
தோழியே
நம் பயணம்
நான் மற்றவர் தோளில்
பயணம் செய்யும் காலம் வரை தொடர வேண்டும்