அடையாததை அடை

ஒவ்வொரு முறையும் நன்றி சொல் உன்னை அலட்சியப்படுத்தி யவர்களுக்கு ஏனெனில் அவர்கள் தான் உன்னை விதையாக முளைக்கத்தூண்டியவர்கள்.
கவலை கொள்ளாதே, உன் முன்னேற்றத்திற்கான படிகளை உன் வீட்டின் தெருவிளக்கு பறைசாற்றும்.
நினைவில் நிறுத்து நீ புழுவல்ல புயல்: நீ ஒளிந்திருக்கும் விதை யல்ல துளிர்விடும் மரம்!
கொடுமையில் இருந்து விலக நினைக்காதே, தடுக்க நினை உனக்கு நேரும் இன்னல்களுக்கு நீயே முதற்காரணம்
ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளமாய் ஓடு அடையாததை அடையும்வரை

எழுதியவர் : கடம்பன் பாலா (16-May-19, 12:32 am)
சேர்த்தது : கடம்பன் பாலா
பார்வை : 84
மேலே