பிரிவு
காந்தப் பார்வையால்
காதலை மட்டும் விதைத்து
காமத்தை துடைத்து...
தொலைபேசியில்
காதலுடன் பேசி
காதலை நட்பென்று
குடும்பத்தின் நலன் கருதி
ஏன் என்னை தொலைத்தாய்...?
தொலைத்த பின்னர்
தேடிய காதல்
தேடுதலாகவே தொலைந்துவிட ...
புதிய பறவையாக
புதுத் தென்றல் ஒன்று
புதிதாக பூத்திட
பூத்த மலருடன்
புரியாத வாழ்க்கை இன்று வரை
பூத்த மலர் உயிராகிவிட
தொலைந்து போன நீயல்லவோ
என் உயிராக...!
பிரிவின் துயர்
உன் விழிநீரின் வழியாக
புரிந்தும் புரியாமல் நான்..
இறப்பும் இறந்துவிடும்
உன் வார்த்தை கேளாமலே...
உன் மன ஆழத்தினை
உணர்ந்திட ஏனோ தவிக்கின்றேன்...
என் முடிவும் முடியுமுன்னே...