முடியாது என்பது எனக்கு எதுவுமில்லை
வானை தொட முடியவில்லை என்று
வருத்தம் நான் கொண்டதில்லை
பூவின் பூக்கும் அழகை ரசிக்க முடியவில்லை
என்று கவலை வந்ததில்லை
கவிதை சொல்ல தோன்றவில்லை
என்று ஒருநாளும் நான் கருதவில்லை
என் தோழியே
நீ என்னோடு இருக்கும் வரை
முடியாது என்பது எனக்கு எதுவுமில்லை