முத்துப் புன்னகை புரியுங்களேன்
மூடிக் கிடந்தால்
பூக்களுக்கு அழகில்லை !
முகத்தில் புன்னகையை மூடி வைத்தால்
பெண்களுக்கு அழகில்லை !
(பாட்டிகளும் included )
உறையிலிட்டு ராகம் பாடும் வீணையை
மூடி வைத்தால் வீணைக்கு அழகோ ?
முத்துக்களை திறந்து வைத்தால் அழகு
சிப்பியில் மூடிக் கிடந்தால் அழகோ ?
ஆதலால்
முத்துப் புன்னகை புரியுங்களேன்
மோகன ராகங்களை வீணையில் வாசியுங்களேன்
மூடிக் கிடக்கும் மலர்களே மலர்ந்து சிரியுங்களேன்
நான் கவிதைப் புத்தகத்தைத் திறந்திட ஒரு சிறு வாய்ப்பளியுங்களேன் !