நான் ஏன் பிறந்தேன் - ஓய்வின் நகைச்சுவை 166
ஓய்வின் நகைச்சுவை: 166
நான் ஏன் பிறந்தேன்?
கணவன்: ஏண்டி! “நான் ஏன் பிறந்தேனு” ஏப்போவாச்சும் நீ நினைச்சுப் பார்த்ததுண்டா?
மனைவி: ஏன்னா! பிறக்கிறச்சே பகவான் என்கிட்டே கேட்கலே, இனி கூட்டிண்டு போறச்சயும் கேட்கப் போறதில்லே! இடையிலே எதுக்கு இந்த வேதாந்தமெல்லாம்? நேரம் போகலேனா, மொபைலை தூர வச்சிண்டு, கிட்சேன்லே வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோ “ஏன் பிறந்தேம்னு” புரிஞ்சிடும்!
கணவன்: ஞான சூன்யம்! ஆ ஊ னா கிட்சேன்லே வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோனு வாயை அடைச்சிற வேண்டியது! ஞான சூன்யம்!!