உருவானக் கூட்டணி உருகக்காரணம்

ஓரிருவர் முடிவெடுத்து பல கோடி
பேரை பணிய வைக்க முயல்கின்றனர்
சில நூறு பேரால் சிந்து பேசச் செய்கின்றனர்

சிலாகித்து மகிழ்ந்து சிறப்பான முடிவு என்கின்றனர்
ஐம்பது நாட்களுக்கு அல்லும் பகலும் ஓடுகின்றனர்
ஐந்தாண்டு வரை ஏசியதை அப்படியே மறக்கின்றனர்

சில்லரைக்கு மயங்கும் சிறு குழந்தையாய் குறுகி
பாராள வாய்ப்பு வந்ததாய் எண்ணி சிலிர்க்கின்றனர்
பம்மாத்துப் பேசிப் பசப்புகின்றனர் - அதை

உண்மையென எண்ணிய மாந்தர் மரித்தார் என்றோ
உனக்கென்ன அனுகூலம் தம்மால் என்று
தராசு நிலையில் சோதிப்போர் இன்று வாழ்பவரானார்

இனப்பேர் மதப்பேர் தாம் சார்ந்த ஜாதிப்பேர் என
கைக்கொண்ட வித்தைப் பேசினும் அவையெல்லாம்
காற்றில் கற்பூரமாய் மாற காழ்ப்புணர்ச்சியில்

கதறி பதறி கடுகாய் பொறிகின்றனர்
கடைசியில் தவறுக்கு காரணம் கற்பிக்கின்றனர்
கட்சியோர் மாற நினைப்பின் வாக்களிப்போரும் மாறுவர்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-May-19, 7:13 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21
மேலே