கார்மேக குழலி

இருள் போன்ற கேசம்
மனம் மயக்கும் வாசம்
தேய்பிறையின் அழகே
இளந்தென்றல் ஸ்பரிசமே
கருவிழி கொண்ட கலைமகளே
கருத்த மேகமாய் அடர்ந்து விரிந்த குழலழகே
பட்டாம்பூச்சி விழி அழகே
பட்டு போன்ற நடை அழகே
மழை பொழியும் மண் வாசமும்
மரகதம் போன்ற பொக்கிஷமும்
நீயே என் கார்மேகக்குழலி

எழுதியவர் : ஹேமாவதி (25-May-19, 12:00 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 804

மேலே