நெஞ்சம் நிறைந்தவளே

நெஞ்சம் நிறைந்தவளே
--------------

என் நெஞ்சில் நிரந்திரமாக குடியேறிய என் உயிரே !

என் கண்கள் கானும் பொருள் யாவிலும் நீயே தெரிகிறாய்!

என் இதயம் ஒவ்வொரு நொடியும் உன் பெயர் சொல்லி துடிக்கிறது!

என் உறக்கத்தை கெடுத்த என் கனவு கன்னியே

என் இனியவளே
இன்சொல் பேசும் அழகிய தமிழ்மகளே

என் மனதை கொள்ளை அடித்த அற்புதமே

என் சிந்தனையில் எப்போதும் தோன்றும்
புது கவிதையே

என் எண்ணம் உன் வண்ணம்

என் உள்ளம் உன் நினைவு

என் உயிர் உன் மூச்சு

என் பார்வை உன் கண்கள்

என் ஆற்றல் உன் ஊக்கம்

என் பேச்சு உன் மொழி

என் சந்தோஷம் உன் முடிவில்

என் வாழ்க்கை உன் கையில்.
- பாலு.

எழுதியவர் : பாலு (25-May-19, 8:27 am)
சேர்த்தது : balu
பார்வை : 593

மேலே